Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

TNPL: திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது திருவள்ளூர் வீரன்ஸ்

In கிாிக்கட்
Published: 04:18 GMT, Jul 31, 2017 |
0 Comments
1299
icon_com
This post was written by : Varothayan
201707302331012626_THIRUVALLUR-VEERANS

தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி வீழ்த்தியது.

இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற திருவள்ளூர் வீரன்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. அவ்வணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்களைக் குவித்தது. அந்த அணியில் சதுர்வேத் 89 ஓட்டங்கள், சித்தார்த் 60 ஓட்டங்களையும் எடுத்தனர். திருச்சி அணி சார்பில் கவுசிக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

183 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணியினர், திருவள்ளூர் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

இதனால், 20 ஓவர்களில் திருச்சி அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. திருவள்ளூர் அணியில் சிலம்பரசன் 3 விக்கெட்டுகளும், ராஹில் ஷா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg