Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளத்தினால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு: மீட்புப் பணிகள் தீவிரம்

In இந்தியா
Published: 10:25 GMT, Jul 31, 2017 |
0 Comments
3032
icon_com
This post was written by : Puvanes

கடந்த சில தினங்களாக இந்தியாவின் கிழக்கு பகுதியில் பெய்த கடும் மழையினால், ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அசாம், குஜராத், ஒடிசா, அரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் கனமழையால் அதிகமாக பாதிப்படைந்துள்ளதோடு, வெள்ளத்தினால் வெளித் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், நிவாரணங்களுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மீட்பு பணியினர் தொடர்ந்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்றைய தினம் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இதன் போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வெள்ளத்தின் காரணமாக 17 கிராம கவுன்சில்களுக்கு உட்பட்ட 140 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 1 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய ஒரு நெருக்கடியான நிலைமை நீண்ட நாட்களுக்கு பின்னர் ஏற்பட்டுள்ளது. தற்போது கணக்கெடுப்பு ஒன்றினை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களைச் நாம் சந்தித்து வருகிறோம்.

மேலும், வீடுகளை விட்டு வெளியேறியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான நிவாரணங்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை அதிகாரிகள் அதிகரிக்க வேண்டும்.

வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்பு பணியில் விமானப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தர்மேந்திர பிரதான் மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg