Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாடு பிரிமீயர் லீக்: காரைக்குடி அணியை வீழ்த்தியது சேப்பாக் அணி

In கிாிக்கட்
Updated: 06:39 GMT, Aug 5, 2017 | Published: 06:39 GMT, Aug 5, 2017 |
0 Comments
1216
This post was written by : Anojkiyan

தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் காரைக்குடி காளை அணிக்கெதிரான 16வது லீக் போட்டியில், சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சேப்பாக் அணி, முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

இதன்படி களமிறங்கிய காரைக்குடி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக லோகேஷ்வர் 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து 111 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சேப்பாக் அணி, 14.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது. இதன்போது கோபிநாத் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் சுனில் சேம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணி சார்பில் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாய் கிஷோர் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg