Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் குமார வெல்கம புறக்கணிப்பு!

In இலங்கை
Updated: 05:25 GMT, Aug 11, 2017 | Published: 05:25 GMT, Aug 11, 2017 |
0 Comments
1179
This post was written by : Ravivarman

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஏற்பாடு செய்திருந்த மத்திய செயற்குழுக் கூட்டத்துக்கு கூட்டு எதிர்க் கட்சியில் அங்கம் வகிக்கும் தான் உட்பட ஐந்து செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து நேற்றையதினம் (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மத்திய செயற்குழுவில் உறுப்பினர்கள் அனைவரும் அழைக்கப்படாமல் எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்றுக் கொள்வதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.

நான் கட்சியின் மத்திய செயற்குழுவில் உப தலைவர். பவித்ரா வன்னியாராச்சி, சீ.பீ. ரத்னாயக்க, மஹிந்த யாபா அபேகுணவர்தன மற்றும் ஜனக பண்டார தென்னகோன் ஆகியவர்கள் மத்திய செயற்குழுவின் உறுப்பினர்கள்.

அனைத்து மத்திய செயற்குழுக் கூட்டத்துக்கும் எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டே நாம் கலந்து கொள்வோம். ஆனால் இம்முறை இடம்பெற்ற கூட்டத்திற்கு மட்டுமே எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இது குறித்து கட்சியின் செயலாளருக்கு தகவல் அறிவித்தும் அவரிடம் இருந்து எதுவித பதிலும் எனக்குக் கிடைக்கவில்லை” என குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg