Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன?

In இலங்கை
Updated: 07:15 GMT, Aug 11, 2017 | Published: 07:15 GMT, Aug 11, 2017 |
0 Comments
1680
This post was written by : Ravivarman

வெளிவிவகார அமைச்சராக விசேட திட்டங்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்றையதினம் பதவி விலகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு திலக் மாரப்பனவை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் சட்டம் ஒழுங்கு அமைச்சராக கடமையாற்றிய திலக் மாரப்பன அவன்ட்கார்ட் சர்ச்சை காரணமாக பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமைச்சர்களான நவின் திஸாநாயக்க, சரத் அமுனுகம ஆகியோரின் பெயர்களும் வெளிவிவகார அமைச்சர் பதவிக்காக சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg