Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

தலைமுடி straightening (ஸ்ரேற்னிங் ) செய்வது சரியா?

In
Published: 09:35 GMT, Aug 11, 2017 |
0 Comments
1064
This post was written by : Kemasiya
Keratin-Treatment-Or-The-Brazillian-Straightening-Technique

இன்றய நாகரிகம் எனப்படும் கால ஓட்டத்தில் பெண்கள் தலைமுடியை ஸ்ரேற்னிங் செய்வதும் ஹேர்லிங் செய்வதும் தான் ஸ்ரைல் என நினைத்துள்ளார்கள்கள். உண்மையில் சில சந்தர்ப்பங்களில் குறித்த முடி ஸ்ரேற்னிங் அல்லது ஹேர்லிங் அழகாக திகழ்ந்தாலும் இவ்வாறு ஸ்ரேற்னிங் செய்வது சிறந்ததா என்பது பலரது சந்தேகமும்.
உண்மையில் ஸ்ரேற்னிங் தலைமுடிக்கு ஆரோக்கியத்தை கெடுக்கும் செயற்பாடாடும் என்பதை அழகுக்கலை நிபுணர்களே கூறுகின்றனர். அந்த வகையில் ஸ்ரேற்னிங் செய்வதனூடாக ஏற்படும் விளைவுகளை எடுத்து நோக்கலாம்.

1.ஸ்ரேற்னிங் மூலம் நீண்ட நேரம் தலைமுடிக்கு வெப்பம் கொடுக்கப்படுகின்றது. இதன் மூலம் மண்டையோட்டிற்கு வெப்பம் உட்சென்று மண்டையோடு வறட்சியடைகின்றது. இதனால் பொடுகு ஏற்படுவதற்கான வாய்ப்புக்ள் அதிகம்

2.ஸ்ரேற்னிங் மூலம் மண்டையோடு வறண்டு போவதால் குறித்த நாளில் இருந்து 2வாரங்களுக்குள் முடி உதிர ஆரம்பிக்கும்.

3. முடியில் உள்ள கலங்கள் வெப்பத்தில் இறந்து போவதகாலே தான் முடி சோர்ந்து கிடக்கின்றது. இவ்வாறு கலங்கள் இறந்து போவதனால் முடி வளர்ச்சியும் ஏற்படாமல் போகின்றது.

4.நாம் தலைமுடியை வெட்டி ஸ்ரேற்னிங் செய்தோமாக இருந்தால் அதன் பின்னர் நீளமாக முடி வளரும் என எதிர்பார்ப்பது வெறும் கனவேயாகும்.

5.அத்துடன் தலையில் கருமை நிறம் நீங்கி முடி செம்படை என்று கூறப்படம் சிவப்பு நிறம் வர ஆரம்பிக்கும். எனவே தலைமுடிக்கு ஸ்ரேற்னிங் செய்வது முடிக்கு வெறும் ஆபத்தனதே என்பதனை அழகுக்கலை நிபுணர்களே ஒத்துக் கொள்ளும் பொழுது தெரிந்தும் அதனை செய்வது நிச்சயம் யானை தன் தலையில் தானே மண்ணல்லி போடுவதை போன்றது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)