Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவையான அன்னாசிக்கறி

In
Published: 10:57 GMT, Aug 11, 2017 |
0 Comments
1275
icon_com
This post was written by : Kemasiya
VD17

தேவையான பொருட்கள்

அன்னாசிப்பழ துண்டுகள் – 1 கப்

புளி-எலுமிச்சை அளவு

வெல்லம் – 1 சிறிய துண்டு

தேங்காய் (துருவியது) – ½ கப்

மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி

பச்சை மிளகாய் (நறுக்கியது)- 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை

கடுகு – 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் – 3 எண்ணம்

எண்ணெய்

உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை

அன்னாசிப்பழத் துண்டுகளை ஒரு சமையல் பாத்திரத்தில் போடவும். அதோடு புளி சேர்த்து சிறிது நீர் ஊற்றி கொதிக்க விடவும். மிளகாய் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இப்போது மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை மூடி வைத்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.

மூடியைத் திறந்து கலவையை நன்கு கிளறி விடவும். இப்போது வேக வைத்த அன்னாசிப்பழ துண்டுகளோடு விழுதாக அரைத்து வைத்த தேங்காய் துருவல் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்க்கவும். இப்போது சிறிய வெல்லத் துண்டுகளைப் போட்டு நன்கு கலக்கவும்.

இப்போது தாளிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, கடுகு ஆகியவற்றை போடவும். கடுகு பொரிந்து தாளித்து தயார் நிலையில் ஆனதும் அதனைப் பச்சடியின் மீது கொட்டவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg