Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

திருப்பதிக்கு சென்ற பக்தர் துப்பாக்கியுடன் கைது!

In இந்தியா
Updated: 17:27 GMT, Aug 12, 2017 | Published: 07:21 GMT, Aug 12, 2017 |
0 Comments
1186
icon_com
This post was written by : Surenth
Arrest

திருப்பதி கோவிலுக்கு துப்பாக்கி ஒன்றையும் குண்டு ஒன்றையும் எடுத்துச் சென்ற நபரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு குறித்த சந்தேகநபர் காரில் அவரது குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த நிலையில், முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மும்பை ஜோலாபூரை சேர்ந்த ரோகித்படேல் எனவும் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் தன்னிடம் உள்ளது என அவர் தெரிவித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர் எதற்காக துப்பாக்கியையும் குண்டையும் கோவிலுக்கு எடுத்துச் செல்ல முற்பட்டார் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கடந்த ஒரு வாரத்தில் திருப்பதிக்கு வந்த வடக்கு மாநில பக்தர்களிடம் 3ஆவது தடவையாக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg