Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அபராதத் தொகை அதிகரிப்பு நியாயமற்றது: மஹிந்த

In இலங்கை
Updated: 09:21 GMT, Aug 12, 2017 | Published: 09:21 GMT, Aug 12, 2017 |
0 Comments
1240
This post was written by : Risha

போக்குவரத்து விதி மீறல்களுக்கான குறைந்தபட்ச அபராதத் தொகை அதிகரிப்பானது, நியாயமற்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் இந்நடவடிக்கையால் குறைந்த வருமானம் பெறுவோர் கடுமையாக பாதிக்கப்படுவர் என, கம்பஹாவில் அரசியல் கூட்டமொன்றில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறுவோரும், முச்சக்கர வண்டி ஓட்டுநர்களும் இதனால் பெரும் சிக்கல்களை எதிர்கொள்வர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகை அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg