Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

உத்தரபிரதேசத்தில் 60 குழந்தைகள் உயிரிழப்பு: முதலமைச்சரை பதவி விலக வலியுறுத்து

In இந்தியா
Published: 11:15 GMT, Aug 12, 2017 |
0 Comments
1232
icon_com
This post was written by : Surenth
Yogi Adithyananth

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்நத் சிங்கிற்கும் இதில் பொறுப்பு உள்ளது என்றும் அவரும் பதவி விலக வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த, மருத்துவமனையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறையால் மூளை வீக்கம் ஏற்பட்டு கடந்த 7ஆம் திகதி முதல் 5 நாட்களில் 60 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg