Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

நீல திமிங்கிலத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்

In இந்தியா
Updated: 05:32 GMT, Aug 13, 2017 | Published: 05:30 GMT, Aug 13, 2017 |
0 Comments
1176
This post was written by : Puvanes
suicide_game001

நீல திமிங்கிலம் எனப்படும் இணைய விளையாட்டுக்கு அடிமையாகி மேற்கு வங்காளம் – மித்னாபூர் பகுதியைச் சேர்ந்த 10ஆம் தர பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ரஷ்ய நாட்டில் உருவான குறித்த இணையத்தள விளையாட்டானது ஆன்லைனில் விளையாடப்படுவதோடு கொடுக்கப்படும் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டு படிப்படியாக 50 கட்டங்கள் தொடர்ந்து விளையாடப்பட வேண்டும்.

நள்ளிரவில் பேய்படம் பார்ப்பது, கத்தி மற்றும் பிளேடால் கைகளை வெட்டிக்கொள்ளல் போன்ற பலவகை கட்டங்களை கடந்து 50ஆவது கட்டமாக விளையாட்டை விளையாடுபவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அத்தோடு அதனை ஆன்லைன் மூலமாக ஏனைய உறுப்பினர்களுக்கு பகிரவும் வேண்டும் என்ற வகையில் இந்த விளையாட்டு அமைக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு தூண்டும் விளயாட்டு என பல நாடுகளில் குறித்த விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் இந்த விளையாட்டு தற்போது வேகமாக பரவி வருகின்றது.

இந்த விளையாட்டுக்கு அடிமையாகி, கடந்த 29ஆம் திகதி மும்பையில் 14 வயது மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் அங்கன் தே எனும் 10ஆம் தர மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், உலகம் முழுவதும் இந்த விளையாட்டினால் 4 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)