Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வேர்ஜினிய மோதல் சம்பவத்துக்கு கண்டனம்

In உலகம்
Published: 07:22 GMT, Aug 13, 2017 |
0 Comments
1125
icon_com
This post was written by : Suganthini
ame

அமெரிக்காவின் வேர்ஜினிய மாநிலத்தில் இடம்பெற்றுள்ள மோதல் சம்பவத்துக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

வெள்ளை நிற தேசியவாதிகளுக்கும் அவர்களின் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இந்த மோதலில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் 1861ஆம் ஆண்டு இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது, வேர்ஜினியா மாநிலத்தில் அடிமைகள் சார்பு இயக்கத்தை வழிநடத்திய ரொபேர்ட் இ லீ என்பவரது உருவச்சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து, தீவிர வலதுசாரி வெள்ளை இனத்தவர்கள் நேற்று (சனிக்கிழமை) பேரணியில் ஈடுபட்டனர்.

இவர்களின் பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மற்றுமொரு பிரிவினரும் பேரணியில் ஈடுபட்டனர். இதன்போது, இரண்டு தரப்பினர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வேர்ஜினியாவில் இடம்பெற்றுள்ள வன்முறைச் சம்பவம் தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி, இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார்.

இந்த வன்முறைச் சம்பவத்தை தாம் கடுமையாகக் கண்டிப்பதாகவும் மேலும் அவர் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg