Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலீஸ் பிரிமியர் லீக் – ஹாட்ஸ்பர் அணியை வீழ்த்தியது செல்சியா

In உதைப்பந்தாட்டம்
Updated: 07:59 GMT, Aug 21, 2017 | Published: 07:59 GMT, Aug 21, 2017 |
0 Comments
1274
This post was written by : Puvanes

அண்மையில் ஆரம்பமான இங்கிலீஸ் பிரிமியர் லீக் காற்பந்து சுற்றுத் தொடரின் நேற்றைய போட்டியில் ஹாட்ஸ்பர் அணியை 2-1 என்ற அடிப்படையில் வீழ்த்தி செல்சியா அணி வெற்றி பெற்றது.

நடப்பு சம்பியனான செல்சியா ஆட்டத்தின் 24 ஆவது நிமிடத்திலேயே மார்கொஸ் அலோன்ஸோ மூலமாக முதலாவது கோலினைப் பதிவு செய்து கொண்டது.

அதனைத் தொடர்ந்து 82 நிமிடத்தில் ஹாட்ஸ்பர் அணியும் மிக்கி பத்ஷுயாவின் உதவியுடன் கோலைப் பெற்றுக் கொள்ள சமநிலையடைந்த ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது.

தொடர்ந்தும் வெற்றி யார் பக்கம் சாயும் என கணிக்க முடியாத நிலையில் இரு அணிகளும் மோதிக்கொண்ட வேளையில் மார்கொஸ் அலோன்சோ கோல் ஒன்றினை அடித்து செல்சியாவை முன்னிலைப்படுத்தினார்.

பதிலுக்கு கடுமையாக போராடிய ஹாட்ஸ்பர் அணியினருக்கு ஆட்ட நேர முடிவு வரையிலும் கோல் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் போட்டியில் செல்சியா அணி றெ்றி பெற்றதுடன் புள்ளிப்பட்டியலிலும் 12ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg