Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- நீதிபதி கர்ணணின் மனு தள்ளுபடி

In இந்தியா
Published: 09:23 GMT, Aug 24, 2017 |
0 Comments
1124
icon_com
This post was written by : Kemasiya
karnan

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனைக்கு எதிராக முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் தாக்கல் செய்த மனுவை கொல்கத்தா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் சென்னை உச்சநீதிமன்றில் நீதிபதியாக பதவி வகித்தபோது பல்வேறு நீதிபதிகள் ஊழல் செய்வதாக கூறி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் பகிரங்கமாக கடிதங்கள் எழுதினார்.

இதனால் அவர் கொல்கத்தா உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடந்த ஆண்டு மாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்தும் அவர் தொடர்ந்து நீதிபதிகளுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் பல உத்தரவுகளையும் பிறப்பித்தார். இதனால் உச்ச நீதிமன்றம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி உச்ச நீதிமன்ற அமர்வுவில் சி.எஸ்.கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றில் மனுதாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. இதனால் தலைமறைவான அவரை கோவை நகரில் கொல்கத்தா பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக கொல்கத்தா உச்சநீதிமன்றில் சி.எஸ்.கர்ணன் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரிக்கப்பட்டது.

அப்போது கர்ணனின் சட்டத்தரணி  மேத்யூஸ் நெடும்பரா வாதிடுகையில், ‘மே மாதம் 9ஆம் திகதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதி கொள்கை அடிப்படையில் அமையவில்லை. எனவே இது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் வராது. இது அரசியல் சாசனத்துக்கும் எதிரானது’ என்றார்.

அவருடைய வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்து இது தொடர்பாக நீதிபதிகள் 35 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கினர். அதில், இது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்து விட்டது. ஆனால் அதே காரணங்களை குறிப்பிட்டு இப்போதும் மனுதாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இது நீதிமன்றத்தை முற்றிலும் திசை திருப்பும் செயல் ஆகும். இதை ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று கூறப்பட்டு இருந்தது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg