Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணிக்குள் பிரச்சினையா? – அணித்தலைவரின் விளக்கம்

In கிாிக்கட்
Updated: 04:44 GMT, Aug 29, 2017 | Published: 04:44 GMT, Aug 29, 2017 |
0 Comments
2598
This post was written by : Puvanes

ஒரு போட்டியில் வெற்றி பெற்று விட்டால் மீண்டும் ஏற்றத்தினை பெற்று விடுவோம் என இலங்கை அணியில் தலைவர் சாமர கபுகெதர தெரிவித்துள்ளார்.

இந்தியா எதிர் இலங்கை மோதிக்கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் இந்திய அணி தொடரை வெற்றி கொண்டது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், இப்போது அணியில் எந்த பிரச்சினையும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர் வெற்றிக்கான நுணுக்கத்தினை நாம் மறந்து விட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான கடைசி இரு போட்டிகளிலும் எமது பந்து வீச்சாளர்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்கள். துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டும்.

எனவே வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள கபுகெதர அணியில் உள்ள பலவீனங்களைக் கண்டறிந்து அதனை திருத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அணிக்குள் பிரச்சினைகள் எதுவும் இல்லை. சொந்த மண்ணில் தோல்வி என்பது பின்னடைவாக இருந்தாலும், இனி சிறப்பாக செயற்பட்டு வெற்றியடைந்து மீண்டும் சிறந்த அணியாக மாறுவோம் எனவும் கபுகெதர மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg