Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாலியல் குற்றவாளி குர்மீத்தின் பொறுப்பை மகனுக்கு வழங்க தாயார் ஆலோசனை

In இந்தியா
Published: 04:37 GMT, Sep 1, 2017 |
0 Comments
1059
icon_com
This post was written by : Kemasiya
fi

“தேரா சச்சா சவுதா” அமைப்பின் புதிய தலைவராக குர்மீத் சிங்கின் மகன் ஜஸ்மீத்தை நியமிக்க காரியாலய கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது.#

அரியானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் (50) பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை பெற்று சிறை சென்றுள்ளார்.

இந்நிலையில், தேரா சச்சா சவுதா அமைப்பின் காரியாலய கூட்டத்தினை குர்மீத்தின் தாய் நசீப் கவுர் நேற்று கூட்டினார். 45 உறுப்பினர்கள் அடங்கிய இக் கூட்டத்தில், தேரா சச்சா சவுதா அமைப்பை நிர்வகிக்க புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் போது பாலியல் பலாத்கார வழக்கில் 2007ஆம் ஆண்டு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட போதே தனக்குப் பிறகு மகன் ஜஸ்மீத் தேரா சச்சா அமைப்புக்கு தலைமை தாங்குவான் என குர்மீத் கூறியிருந்தார் . அதன்படி  ஜஸ்மீத்தை புதிய தலைவராக நியமிப்பதாக குர்மீத்தின் தாய் நசீப் கவுர் பரிந்துரை செய்தார்.

ஆனால் அதை ஏற்க மற்ற உறுப்பினர்கள் மறுத்ததால் அவரை தலைவராக அறிவிப்பதற்கான முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் நிறைவடைந்துள்ளது. இருப்பினும் புதிய தலைவராக ஜஸ்மீத் பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

 மேலும் குர்மீத்தின் மனைவி ஹர்ஜித் கவுர் என்பதும் இவர்களுக்கு சரன்ப்ரீத்,  அமர்ப்ரீத், இரு மகள்களும்  ஜஸ்மீத்  என்ற மகனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தவிர ஹனிப்ரீத் என்ற பெண்ணை குர்மீத் தத்தெடுத்து தனது மகளாக வளர்த்து வந்தார் என்றும் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg