Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவை மிரட்ட முயற்சிப்பதாக லியாம் ஃபொக்ஸ் குற்றச்சாட்டு

In
Updated: 10:52 GMT, Sep 1, 2017 | Published: 10:52 GMT, Sep 1, 2017 |
0 Comments
1161
This post was written by : Elakkiya
f5436000-28f0-4381-9202-7e9bb75e0b96

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளின் மந்தமான முன்னேற்றங்களால் லண்டன்; பிரசல்ஸிற்கு இடையில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவை மிரட்டுவதற்கு முயற்சிப்பதாக சர்வதேச வர்த்தக விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க செயலாளர் லியாம் ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் லியாம் ஃபொக்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ஐரோப்பிய ஒன்றியத்துடனான மிகுந்த சர்ச்சைக்குரிய பிரெக்சிற் உடன்படிக்கையை பிரித்தானியா ஏற்றுக் கொள்ளும் தருணம் இதுவே. இறுதி தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் அதுவே வர்த்தகத்திற்கு சிறந்ததாக அமையும். ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் மற்றும் பிரித்தானிய பிரஜைகளின் நலன்களுக்கும் சிறந்தது. உலகெங்கிலும் உள்ள வணிகங்கள் பேச்சுவார்த்தையின் மெதுவான முன்னேற்றத்துடன் பொறுமை இழந்துவிட்டன.’ என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg