Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மொன்றியலில் புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டது சீன தாவரவியல் பூங்கா

In கனடா
Updated: 11:47 GMT, Sep 2, 2017 | Published: 11:47 GMT, Sep 2, 2017 |
0 Comments
1115
icon_com
This post was written by : Elakkiya
nmk

மொன்றியலில் அமைந்துள்ள சீன தாவரவியல் பூங்கா புனரமைப்பின் பின்னர் நேற்று (வெள்ளிக்கிழமை) பொதுமக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவந்த இந்த பூங்கா நேற்று உத்தியோகபூர்வமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஷங்காயிலிருந்து வரவழைக்கப்பட்ட விசேட கைவினைஞர்களால் மீளப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 1991 ஆம் ஆண்டில் இருந்தது போன்று பூங்காவின் ஏழு அரங்குகளும் மீட்டமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன மற்றும் கனேடிய- மொன்றியல் கலாசாரங்களை இணைத்து அமைக்கப்பட்ட இந்த பூங்கா மிக உணர்வுபூர்வமானதுடன் மிகவும் பிரபல்யம் வாய்ந்ததாகும். இயற்கை காட்சிகள் உள்ளடங்கிய சிறிய வடிவமைப்பை தனது 350 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் ஷங்காய் மொன்றியலுடனான நட்பிற்கு ஞாபகார்த்தமாக வழங்கியுள்ளது.

ஆசியாவிற்கு வெளியில் அமைந்துள்ள மிகப்பெரிய சீன பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg