Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தேர்தலை டிசம்பரில் நடத்துவதில் சவால்கள்: மஹிந்த

In இலங்கை
Published: 12:38 GMT, Sep 2, 2017 |
0 Comments
1189
icon_com
This post was written by : Ravivarman
download (7)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி நடத்துவதில் அரசாங்கம் இன்னும் பல சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளருடன் இன்று (சனிக்கிழமை) தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தலுக்கான திகதி அறிவிப்பதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளம் இருக்கின்றன. மாநகரசபை, நகரசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டத்தின் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கின்றன.

அத்துடன் சாதாரண தர பரீட்சை டிசம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு இடையூறுகளை ஏற்படுத்தாமல் தேர்தலை நடத்த வேண்டும்.

இவ்வாறான பல சவால்களின் மத்தியிலேயே குறித்த தேர்தலை நடத்தவேண்டியுள்ளதுடன், நாட்டின் பாதுகாப்பினையும் கருத்திற் கொள்ளவேண்டியுள்ளது” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg