Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணியில் இருப்பதில் எந்த பயனும் இல்லை – கேள்விக்குறியான மாலிங்கவின் எதிர்காலம்!

In கிாிக்கட்
Updated: 05:40 GMT, Sep 3, 2017 | Published: 05:39 GMT, Sep 3, 2017 |
0 Comments
2637
This post was written by : Puvanes

இன் மேல் நான் அணியில் இருந்து என்ன பயன் என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர் இந்தியா மோதிக் கொண்ட 4ஆவது ஒருநாள் போட்டியில் தலைவராக மாலிங்க செயற்பட்டார். குறித்த போட்டியின் தோல்வியைத் தொடர்ந்து நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், இந்தியா மற்றும் சிம்பாபே போட்டித் தொடர்களிலும் நான் சிறப்பாக பந்து வீசவில்லை எனக் குறிப்பிட்ட மாலிங்க உடற்தகுதி பிரச்சினை ஒன்று தன்னிடம் காணப்படுகின்றது எனக் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அணியை வெற்றி பெற வைக்க முடியாத நிலையில் நான் அணியில் இருப்பதில் எந்த பயனும் இல்லை எனக் கூறிய அவர் அணியில் தான் நீடிப்பது முறையல்ல என நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்த தோல்விகளில் இருந்து மீண்டும் எழுந்து வர முயற்சி செய்வேன் எனக் குறிப்பிட்டுள்ள மாலிங்க அணியில் தான் தொடர்ந்தும் நீடிப்பது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் தீர்மானிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg