Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரபாகரன் இருந்திருந்தால் தேசிய உணர்வு இல்லாமல் போயிருக்காது: விபஸ்ஸி தேரர்

In இலங்கை
Updated: 11:37 GMT, Sep 4, 2017 | Published: 04:35 GMT, Sep 4, 2017 |
0 Comments
1864
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

நாட்டு மக்களுக்கு தற்போது தேசிய உணர்வென்பது இல்லாமல் போயுள்ளதென்றும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் சிறந்ததென தற்போது சிந்திப்பதாகவும் பெல்பொல விபஸ்ஸி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெல்பொல விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் பதவியிலிருந்து விஜயதாச நீக்கப்பட்டமை தொடர்பாக, நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போது தமது தலைவர்களையும் மகாநாயக்கர்களையும் மோசமாக திட்டும் ஒரு நிலை காணப்படுவதாக தெரிவித்த தேரர், இவ்வாறு சென்றால் நாடு அதள பாதாளத்தில் விழும் நிலை ஏற்படுமென மேலும் தெரிவித்தார்.

உண்மையை கூறினால் சில நேரம் பொறுத்துக்கொள்ள முடியாமல் போகுமென குறிப்பிட்ட தேரர், நேர்மையானர்களை தேர்வு செய்து முக்கிய பதவிகளில் அமர்த்தினால் நாடு உரிய இலக்கை அடையுமென குறிப்பிட்டார். அந்த நிலை இல்லாத காரணத்தினாலேயே, இன்று கண்ணீர் விட்டு அழும் நிலை ஏற்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேர்தலுக்கு முன்பு மக்கள் கூறும் விடயங்களை செவிமடுக்கும் தலைவர்கள், தேர்தலுக்கு பின்னரும் மக்கள் கூறுவதை கேட்பார்களாக இருந்தால் நாட்டில் பிரச்சினைக்கு இடமிருக்காதென பெல்பொல விபஸ்ஸி தேரர் இதன்போது குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg