Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளுக்கு இணக்கப்பாடு

In உலகம்
Published: 05:19 GMT, Sep 4, 2017 |
0 Comments
1199
icon_com
This post was written by : Suganthini

வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபையால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை தொடர்வதற்கு தென்கொரியாவும் ஜப்பானும் இணங்கியுள்ளன.

வடகொரியாவின் ஆறாவது அணுவாயுதப் பரிசோதனையை அடுத்து, வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளுக்கு இந்த இரு நாடுகளும் இணங்கியுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜேயும் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயும் சுமார் 20 நிமிடங்கள்வரை தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளனர். இதன்போதே, அவர்கள் இருவரும் இந்த இணக்கப்பாட்டை எட்டியுள்ளனர்.

வடகொரியா மீதான பொருளாதாரத் தடையின் நோக்கமானது, வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு இணங்க வைப்பதேயாகும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் ஜப்பான், பிரித்தானியா, பிரான்ஸ், தென்கொரியா ஆகியவற்றின் வேண்டுகோளுக்கு அமைய, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று (திங்கட்கிழமை) கூடி, வடகொரியாவின் செயற்பாடு தொடர்பில் கலந்துரையாடவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவானது ஆறாவது அணுவாயுதப் பரிசோதனையை நேற்று நடத்தியுள்ளது. இதன்போது, ஹைட்ரஜன் எனும் வெடிகுண்டை வடகொரியா பரிசோதித்துள்ளது. இந்த அணுவாயுதப் பரிசோதனை, வெற்றிகரமாக முடிந்துள்ளது எனவும் வடகொரியா அறிவித்திருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg