Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அர்ச்சுனனை பெற்ற பாரதத்திற்கு வில்வித்தையில் தங்கம் வெல்ல திண்டாட்டம்!

In விளையாட்டு
Updated: 06:31 GMT, Sep 4, 2017 | Published: 05:54 GMT, Sep 4, 2017 |
0 Comments
1163
icon_com
This post was written by : Puvanes
rom_Archery001

உலக வில்வித்தை சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இறுதிச்சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவின் முன்னணி தீபிகா குமாரி வீராங்கனை அதிர்ச்சி தோல்வியினை சந்தித்துள்ளார்.

ரோமில் நடைபெற்று வரும் குறித்த வில்வித்தை போட்டித் தொடரில் இந்தியாவின் சார்பில் 5 முறை வெள்ளிப் பதக்கம் வென்ற தீபிகா குமாரி நம்பிக்கை நட்சத்திரமாக கலந்து கொண்டார்.

கடுமையான போராட்டங்களின் பின்னர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற தீபிகா, இறுதிச்சுற்றின் முதற் போட்டியில் தாய்வான் வீராங்கனை தான் யா டிங்குடன் மோதி 6-0 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார்.

தொடர்ந்தும் நடந்த இறுதிப் போட்டியில் கொரியாவின் கி போ பே தங்கத்தையும், ரஷ்யாவின் சேனியா பெரோவா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றதோடு, வெண்கலப் பதக்கத்தினையும் கொரியாவின் சாங் ஹை ஜின் வென்றெடுத்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg