Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாக்காளர்களுக்கு இறுதி சந்தர்ப்பம்!

In இலங்கை
Updated: 08:36 GMT, Sep 4, 2017 | Published: 08:17 GMT, Sep 4, 2017 |
0 Comments
1300
This post was written by : Anojkiyan

2017ஆம் ஆண்டிற்குரிய தேர்தல் வாக்காளர் இடாப்புக்களில் தங்களின் பெயர் இடம்பெறவில்லையென்றால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 06ஆம் திகதிக்கு முன்னதாக, பெயர்களைச் சேர்த்துக் கொள்ளமுடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் ஆரம்பத் தயாரிப்பு தற்போது முடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.

தங்களது பெயரும் வாக்காளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என சம்பந்தப்பட்ட கிராம அலுவலர், பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் என்பனவற்றில் சரிபார்த்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி 18 வயதைப் பூர்த்தி செய்துள்ள தகைமையுடைய அனைத்து இலங்கை பிரஜைகளும் தேர்தல் இடாப்புக்களில் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg