Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முச்சக்கர வண்டி விபத்தில் மூவர் படுகாயம்

In இலங்கை
Updated: 04:42 GMT, Sep 5, 2017 | Published: 04:39 GMT, Sep 5, 2017 |
0 Comments
1844
This post was written by : Varshini

மட்டக்களப்பு – கல்லடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணியளவில், முச்சக்கர வண்டியொன்று மின்கம்பத்தில் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மட்டக்களப்பு புன்னச்சோலை – குமாரபுரம் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு, முச்சக்கரவண்டியும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஆலையத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

threewheel accident (4) threewheel accident (2) threewheel accident (1) threewheel accident (5) threewheel accident (6)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg