Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீட் தேர்வு விவகாரம்: 9 ஆம் திகதி மாபெரும் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு

In இந்தியா
Updated: 08:31 GMT, Sep 5, 2017 | Published: 08:31 GMT, Sep 5, 2017 |
0 Comments
1186
icon_com
This post was written by : Elakkiya
ttv-dinakaran

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வலுயுறுத்தி அ.தி.மு.க. அம்மா அணியின் சார்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணர்வுகளை மத்திய அரசுக்கு வெளிப்படுத்தும் வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கண்டனப் பேரணி இடம்பெறும் என்றும் அதிமுக அம்மா அணியின் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சமூக நீதியை பாதுகாக்கும் வகையில் இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடம்பெறுவதால் மாநில கல்வித் திட்டத்தில் கற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg