Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜெயலலிதாவின் ‘வேதா’ இல்லம் தொடர்பில் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

In இந்தியா
Updated: 12:26 GMT, Sep 5, 2017 | Published: 12:26 GMT, Sep 5, 2017 |
0 Comments
1093
icon_com
This post was written by : Elakkiya
gty-supreme-court-cases-jef-131003-33x16-1600-1488382587

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் அவருடைய வேதா இல்லம் இடம்பெற்றிருந்ததா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அத்துடன் அது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றில் விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலிலதாவின் வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தினால் தண்டனை பெற்ற ஒருவரின் வீட்டினை நினைவில்லமாக மாற்றக்கூடாது என கூறி தங்கவேல் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் வேதா இல்லத்தில் நடைபெற்றுள்ளதால் அதனை நினைவில்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வேதா இல்லம் இடம்பெற்றிருந்ததா என கேள்வி எழுப்பியதுடன் அது குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg