Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘நெருப்புடா’ படக்குழுவினரின் ஊடகச் சந்திப்பு

In சினிமா
Updated: 14:06 GMT, Sep 5, 2017 | Published: 12:20 GMT, Sep 5, 2017 |
0 Comments
1256
This post was written by : Varothayan

‘நெருப்புடா’ திரைப்படம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினரின் ஊடகச் சந்திப்பொன்று இன்று சிவாஜி இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்ட நடிகர் விக்ரம் பிரபு, நடிகை நிக்கி கல்ராணி, இயக்குனர் அசோக்குமார் ஆகியோர் ஆதவன் தொலைக்காட்சிச் சேவைக்கு, படம் பற்றிய தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இயக்குனர் பேசுகையில், தீயணைப்பு வீரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில், தீயணைப்பு வீரராக விக்ரம் பிரபு  மிகச்சிறப்பாக நடித்துள்ளார். நான் எழுதிய கதைக்கு அவர் தனது நடிப்பின்மூலம் உயிர்கொடுத்துள்ளார் எனத் தெரிவித்தார்.

நடிகர் விக்ரம் பிரபு, முதன்முதலாக இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் எதிர்வரும் 8 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வெளியாகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg