Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

முச்சக்கரவண்டி விபத்து: மூவர் படுகாயம்!

In இலங்கை
Published: 14:27 GMT, Sep 5, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Ravivarman
download (3)

மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லடி பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.00 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டி மின்கம்பத்தில் மோதியதாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதுடன், மட்டக்களப்பு புன்னச்சோலை – குமாரப்புரம் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களே காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஆலையத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்ததுடன், முச்சக்கரவண்டி முற்றாக சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg