Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அகதிகள் பிரச்சினையை கையாள ஒற்றுமை அவசியம் – மெர்கல்

In ஐரோப்பா
Published: 04:07 GMT, Sep 6, 2017 |
0 Comments
1242
icon_com
This post was written by : Suganthini

அகதிகள் பிரச்சினையைக் கையாள்வது தொடர்பில், உறுப்பு நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் கூடுதலான ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என ஜேர்மன் கன்சர்வேட்டிவ் கட்சி அதிபர் அஞ்சலா மெர்கல் வலியுறுத்தியுள்ளார்.

ஜேர்மனில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் மாத்திரமே உள்ளது.

இந்நிலையில், ஹெய்டல்பேர்க்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அகதிகளின் பிரச்சினைகளைக் கையாள்வது தொடர்பில் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒற்றுமையின்றிச் செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மோதல்கள் மற்றும் ஏழ்மை காரணமாக, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த பெருமளவான அகதிகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தற்போது தஞ்சம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg