Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் கலவரத்தை தூண்ட முயற்சி! – பலத்த பாதுகாப்பில் பொலிஸார்

In இந்தியா
Updated: 06:51 GMT, Sep 6, 2017 | Published: 05:24 GMT, Sep 6, 2017 |
0 Comments
1276
icon_com
This post was written by : Puvanes
tamilnadu_police001

தமிழகத்தில் நீட் தேர்வு பல்வேறுபட்ட பிரச்சினைகளை உருவாக்கி வந்த நிலையில் மாணவி அனிதாவின் தற்கொலையானது நிலைமையை மேலும் பூதாகரமாக்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும், நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்திவரும் போராட்டங்களில் தேசவிரோதிகள் ஊடுருவி உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உளவுத்துறையினரும், பொலிஸாரும் தீவிர கண்காணிப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தேசவிரோதிகள் உட்புகுந்து கலவரத்தை தூண்ட முயற்சி செய்தனர். அதேபோன்று தற்போதும் நீட் தேர்விற்கான தமிழக மாணவர்களில் போராட்டங்களின் மூலமாக கலவரங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg