Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்டார் விவகாரம் – சிறப்பு பிரதிநிதி நியமனம்

In ஐரோப்பா
Published: 07:06 GMT, Sep 6, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Suganthini
qatar

பாரசீக வளைகுடாப் பிராந்தியத்தில், அரேபிய நாடுகளுக்கும் கட்டாருக்கும் இடையில் நிலவும் குழப்பமான நிலைமையை சீர்செய்வதற்காக சிறப்புப் பிரதிநிதியொருவரை பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு நியமித்துள்ளது.

சவூதி அரேபியாவுக்கான முன்னாள் தூதுவரான பெர்ட்ரண்ட் பெசன்ஸனோட் என்பவரே நேற்று (செவ்வாய்க்கிழமை) சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத்துக்கு ஆதரவு வழங்குவதாக கட்டார் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை கட்டார் நிராகரித்துள்ளது.

சவூதி அரேபியா தலைமையிலான நாடுகளுக்கும் கட்டாருக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நாடுகளுக்கு இடையிலான மத்தியஸ்த முயற்சியில் சிறப்புப் பிரதிநிதி ஈடுபடவுள்ளார்.

இந்த நாடுகளுக்கு இடையில் நிலவும் சூழ்நிலையை சிறப்புப் பிரதிநிதி மதிப்பீடு செய்து பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார். அத்துடன், இந்த நாடுகளுக்கு இடையிலான மத்தியஸ்த முயற்சிகளையும் அவர் முன்னெடுத்து, சமாதானத்தை ஏற்படுத்துவார் என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஆக்னஸ் ரோமாட் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg