Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நுளம்பினைக் கட்டுப்படுத்த அனைவரதும் ஒத்துழைப்புத் தேவை: குணசீலன்

In இலங்கை
Updated: 08:49 GMT, Sep 6, 2017 | Published: 07:34 GMT, Sep 6, 2017 |
0 Comments
1302
icon_com
This post was written by : Ravivarman
DSC_0019

மன்னார் தீவுப்பகுதியில் அண்மையில் மலேரியா நோயை பரப்பும் நுளம்பின் புதிய வகை காவி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னார் தீவுப்பகுதியில் அண்மையில் மலேரியா நோயை பரப்பும் ‘அனாஅக் பிலிஸ் ஸ்டீபென்சி’ என்ற நுளம்பின் புதிய வகைக் காவி பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனால் எதிர்காலத்தில் மலேரியா நோயின் தாக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றமையினால் ஆரம்பத்திலேயே குறித்த நுளம்பு இனத்தின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசர தேவை உள்ளது.

மன்னார் தீவுப்பகுதியில் உள்ள கிராமங்களை 7 பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, இவர்களுக்கு கீழ் உப குழுக்கள் நியமிக்கப்பட்டு குறித்த வேலைத்திட்டம் நடை முறைப்படுத்தப்படவுள்ளது.

இதன் போது குறித்த பிரதேசங்களில் உள்ள பயன்பாட்டில் உள்ள மற்றும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற கிணறுகள் மற்றும் நீர்த்தொட்டிகள் போன்றவற்றில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன” என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

DSC_0056 DSC_0044 DSC_0029

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg