Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பொன்சேகாவின் கருத்துக்கும் பிரதமருக்கும் தொடர்புண்டு! – மஹிந்த தரப்பு குற்றச்சாட்டு

In இலங்கை
Published: 09:23 GMT, Sep 6, 2017 |
0 Comments
1277
icon_com
This post was written by : Arul Jesu

முன்னாள் இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய யுத்த குற்றங்களில் ஈடுபட்டதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்து தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மௌனம் காப்பது, பிரதமரும் பொன்சேக்காவின் கருத்துடன் இணைந்து போவதற்கு சமன் என்றே கருத வேண்டியுள்ளதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சரத் பொன்சேக்கா யுத்த களத்தில் குண்டு தாக்குதலை எதிர்கொள்ளவில்லை எனவும் மாறாக கொழும்பு இராணுவ தலைமையகத்திலே தாக்குதலுக்கு இலக்கானதாகவும் அவர் கூறினார்.

அப்போது தற்கொலை குண்டுதாரியான பெண் ஒருவருக்கு இராணுவ தலைமையகத்திற்குள் வருவதற்கு யார் அனுமதியளித்தது என்ற பிரச்சினை ஏற்றட்ட போது, சரத் பொன்சேகாவின் பெயரே கூறப்பட்டதாகவும், இதனை தற்போதைய அரசாங்கம் கண்டறிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எனவே முன்னாள் ஜனாதிபதி பெற்றுக் கொண்ட யுத்த வெற்றியை காட்டி கொடுக்கும் வகையில் பொன்சேகா செயற்படுவதாகவும், டயஸ் போராவிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு அவர் இதனை முன்னெடுப்பதாகவும் அவர் கூறினார்.

எனவே முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் அமைச்சு பதவியை பறித்தது போல், பொன்சேகாவின் அமைச்சு பதவியையும் பறிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg