Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெலிமடையில் வைத்தியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு!

In இலங்கை
Updated: 08:36 GMT, Sep 7, 2017 | Published: 11:44 GMT, Sep 6, 2017 |
0 Comments
1192
This post was written by : Ravivarman

வெலிமடை அடிப்படை வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (புதன்கிழமை) முதல் காலவரையரையற்ற பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

42 வைத்தியர்கள் கடமையில் ஈடுபடவேண்டிய குறித்த வைத்தியசாலையில் தற்போது 21 வைத்தியர்களே கடமையில் உள்ளதாகவும் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியர்கள் பற்றாக்குறை சம்மந்தமாக தாம் ஏற்கனவே பல முறை சம்மந்தபட்ட தரப்பினருக்கு தெரிவித்திருந்த போதிலும் அதற்கான தக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படாமையினால் தாம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடத்  தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வெலிமடை கிளையின் செயலாளர் நாமல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

ஊவா பரணகம, வெலிமடை ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 02 இலட்சத்திற்கும் அதிகமானோர் இவ் வைத்தியசாலையில் சிகிச்சை வருவதாகலும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

சம்மந்தபட்ட தரப்பினர் முன்வந்து வெலிமடை வைத்தியசாலைக்கு போதிய வைத்தியர்களை நியமித்து தரும் வரை தாம் இவ் பணி பகிஸ்கரிப்பினை தொடரவுள்ளதாக வைத்தியர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Hospitel (8) Hospitel (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg