Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊடகவியலாளரின் கொலை விசாணைக்கு சிறப்பு குழு

In இந்தியா
Updated: 06:00 GMT, Sep 7, 2017 | Published: 04:24 GMT, Sep 7, 2017 |
0 Comments
1274
This post was written by : Kemasiya
drthrt

சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கவுரி லங்கேஷ் என்னும் பத்திரிகையாளர் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் அமைச்சர்கள் பலரும் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ள நிலையில் நேற்றய தினம் பிரேத பரிசோதனையின் பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவரின் உடல் அரச மரியாதையுடக் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா நேற்று(புதன்கிழமை) அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றினை நடாத்தினார். கூட்டம் நிறைவடைந்ததும் ஊடகவியலாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறுகையில்,

கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி விசாரிக்க ஐ.ஜி. தலைமையிலான ஒரு சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) அமைத்து உத்தரவிட்டுள்ளேன். இந்த மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய தந்தை காலத்தில் இருந்து கவுரி லங்கேஷ் எனக்கு நன்றாக அறிமுகமானவர்.

கவுரி லங்கேஷ் வீட்டில் உள்ள ஒரு கண்காணிப்பு கமராவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுடும் காட்சி பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக சில தகவல்கள் கிடைத்துள்ளது. குறித்த பத்திரிகையாளரின் கொலையை கொண்டாடும் முகமாக  முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg