Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

20இற்கு மீண்டும் அடி – வடக்கும் நிராகரித்தது (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Published: 06:21 GMT, Sep 7, 2017 |
0 Comments
1356
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை வடக்கு மாகாண சபையும் நிராகரித்துள்ளது. அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) கூடிய வடக்கு மாகாண சபை அமர்வில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், அதுகுறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் இத் தீர்மானம், அவைத்தலைவர் ஊடாக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இத் திருத்தச் சட்டத்தில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுவதால், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை இது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் கூறமுடியாதென முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கில் இன்று இறுதி தீர்மானம்!

சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் நடத்தும் யோசனை அடங்கிய 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான இறுதி தீர்மானம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்படும்.

குறித்த திருத்தச் சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் மக்களின் தேர்தல் உரிமையை பறிப்பதாக அமைவதோடு, மாகாண சபைகளின் இறையாண்மையை கேள்விக்குறிக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளதென பெரும்பாலானோர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை முன்வைக்கப்பட்ட ஏனைய மாகாண சபைகள் பெரும்பாலானவற்றில் இத் திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளும் இதனை நிராகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இத் திருத்தச் சட்ட மூலத்திற்கு கடந்த வடக்கு மாகாண சபை அமர்வில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்ததோடு, திருத்தங்களை மேற்கொண்டால் மாத்திரமே இதற்கு ஆதரவு வழங்கப்படுமென கிழக்கு முதல்வர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg