Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய பஸ்டா: நடாலுடன் விளையாட விருப்பம்

In டெனிஸ்
Published: 08:16 GMT, Sep 7, 2017 |
0 Comments
1171
icon_com
This post was written by : Anojkiyan
Australia v India: Semi Final - 2015 ICC Cricket World Cup

ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், ஸ்பெயினின் பாப்லோ கார்ரீனோ பஸ்டா, கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

காலிறுதி போட்டியில் 19ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் பாப்லோ கார்ரீனோ பஸ்டா, ஆர்ஜென்டினாவின் டியாகோ ஸ்க்வார்ட்ஸ்மேனை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற் இப்போட்டியில், பாப்லோ கார்ரீனோ பஸ்டா, 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டியாகோ ஸ்க்வார்ட்ஸ்மேனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

நடப்பு தொடரில் ஒரு செட்டை கூட இழக்காத பஸ்டா கூறுகையில், “அரையிறுதிக்கு முன்னேறியதை நம்பவே முடியவில்லை. இது போன்று எல்லாம் நடக்க வேண்டும் என்று கனவு கண்டது உண்டு. ஆனால் இங்கு வருகை தந்த போது இந்த நிலையை எட்டுவேன் என்று நினைக்கவே இல்லை. இறுதி போட்டியில் சக நாட்டவர் ரபேல் நடாலுடன் பலப்பரீட்சை நடத்தினால் அற்புதமாக இருக்கும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg