Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கதலோனியாவின் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு- நாடாளுமன்றம் அனுமதி

In ஐரோப்பா
Updated: 08:36 GMT, Sep 7, 2017 | Published: 08:36 GMT, Sep 7, 2017 |
0 Comments
1245
This post was written by : Elakkiya

ஸ்பெய்னில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு அனுமதி கோரும் சட்டமூலத்திற்கு கதலோனிய நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்த வாக்கெடுப்பு நேற்று (புதன்கிழமை) கதலோனிய நாடாளுமன்றில் இடம்பெற்றிருந்த நிலையில் சட்டமூலத்திற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளது. சுமார் 12 மணித்தியால காரசாரமான விவாதத்தின் பின்னரே பெரும்பான்மை வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கதலோனியாவின் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

சுதந்திர வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் பின்னர் தமது எதிர்ப்பை கைவிட, சிலர் வாக்களிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg