Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரிய நெருக்கடி- தீர்வுக்கு வழிசொல்லும் ரஷ்ய ஜனாதிபதி

In ஐரோப்பா
Updated: 09:22 GMT, Sep 7, 2017 | Published: 09:22 GMT, Sep 7, 2017 |
0 Comments
1421
This post was written by : Elakkiya

வடகொரிய நெருக்கடி நிலை இராஜதந்திர ரீதியில் தீர்க்கப்பட வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் தூரகிழக்கு நகரான விளாடிவோஸ்டோக்கில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கிழக்கு பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்பாளர்கள் முன்னிலையில் உரையாற்றும்போதே விளாடிமிர் புட்டின் மேற்படி வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் வடகொரியா மீதான பதற்றங்களை குறைப்பாதாக ஆசை காட்டியுள்ளதாக புட்டின் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை தமது தற்காப்புக்கான ஒரே வழி என்று கருதுவதால் வடகொரியா இவற்றை எப்போதும் கைவிடாது என்றும் இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இராணுவ நடவடிக்கையை தூண்டுவது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg