Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ரோஹிங்கிய முஸ்லிம்கள் குறித்து கிழக்கு மாகாண சபையில் தீர்மானம்!

In இலங்கை
Published: 13:35 GMT, Sep 7, 2017 |
0 Comments
1273
icon_com
This post was written by : Surenth
Rohingya Muslims

மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனப்படுகொலைகளை கண்டித்து, கிழக்கு மாகாண சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் 83ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது, எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை அவசர பிரேரணையை முன்வைத்தார்.

குறித்த பிரேரணையில் ரோஹிங்கியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை உடன் நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையினையும், மியன்மார் அரசாங்கத்தினையும் இலங்கை அரசாங்கம் கோர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மேற்படி பிரேரணை, கிழக்கு மாகாண சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg