Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மு.கா.வின் உச்சகட்ட அரசியல் வியூகம்!

In இலங்கை
Updated: 07:45 GMT, Sep 8, 2017 | Published: 02:52 GMT, Sep 8, 2017 |
0 Comments
1452
This post was written by : Varshini
hakeem

கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலத்தை குறைக்க அதன் அதிருப்திக் குழு பல்வேறு பிரசாரங்களை முன்னெடுத்து வரும் நிலையில், கட்சியின் பலத்தை தக்கவைத்துக் கொள்வதோடு, அதனை மேலும் அதிகரிக்கும் வகையில் கட்சியின் செயலாளர் நாயகமாக கல்முனை மாநகர சபை முன்னாள் மேயரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி தொடர்பில் அக் கட்சிக்குள் கடந்த காலமாக பல்வேறு உட்பூசல்கள் நிலவி வந்தன. இந்நிலையில், அண்மையில் நடந்த கட்சியின் பேராளர் மாநாட்டின் போது, செயலாளரை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவர் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் கட்சியின் தற்காலிக செயலராக மன்சூர் ஏ.காதர் நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரான ஒரு அமைப்பை கட்டியெழுப்பும் நோக்கில் கிழக்கில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை தகர்த்தெறியும் வகையிலும், கட்சியின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலும் நிசாம் காரியப்பரை செயலாளராக நியமித்த ஹக்கீம், இது தொடர்பான சட்டபூர்வ ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிடமும் சமர்ப்பித்துள்ளார்.

சட்டத்துறையில் பாண்டித்தியம் பெற்ற நிசாம் காரியப்பர், முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமாக பதவிவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg