Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மெக்சிகோ நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழப்பு (2ஆம் இணைப்பு)

In உலகம்
Published: 06:25 GMT, Sep 8, 2017 |
0 Comments
1239
icon_com
This post was written by : Elakkiya

மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி, ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.
பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, பெருமளவான சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஆறு நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், சுனாமி அலைகள் மேலெழுந்து பல கட்டடங்களை சேதப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக, மக்கள் பீதியில் இடம்பெயர்ந்து வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
 மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மெக்சிகோவில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

மெக்சிகோவின் தென் கரையோர பகுதியில் பசுபிக் பெருங்கடலில் 8.0 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மெக்சிகோவின் தென்மேற்கு நகரான பிஜிஜியாபன் பகுதியிலிருந்து சுமார் 100 கிலோ மீற்றர் தொலைவில் 35 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மெக்சிகோ, குவாத்தமாலா, எல் சல்வடோர், கொஸ்டாரிகோ, நிகரகுவா, பனாமா மற்றும் ஹொண்டுராஸ் ஆகிய இடங்களுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டடங்களிலிருந்து வெளியேறிய மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மெக்சிகோவில் கடந்த 1995 மற்றும் 1985 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னர் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg