Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தமிழக ஆட்சி நொடிப்பொழுதில் மாறும்: மு.க.ஸ்டாலின்

In இந்தியா
Updated: 07:43 GMT, Sep 8, 2017 | Published: 06:37 GMT, Sep 8, 2017 |
0 Comments
1129
icon_com
This post was written by : Kemasiya
download

தமிழகத்தில் தற்பொழுது இடம்பெறும் ஆட்சி நொடிப்பொழுதில் மாறுவதற்கான வாய்ப்புள்ளதென தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10ஆம் திகதி ஆளுநர் வித்தியாசாகர்ராவை தி.மு.க அணியினர் சந்திக்கவுள்ளோம். அவரிடம் தற்போதைய தமிழக அரசில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்பது குறித்து பேசவுள்ளோம் எனவும் தஞ்சையில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அரசியல் மாற்றம் தொடர்பில் ஆளுநர் முடிவெடுக்காவிடில் தமிழக அரசில் மாற்றம் வரும்வரையில் தொடர்ந்து போராடவுள்ளோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து வருத்தம் தெரிவித்த ஸ்டாலின் நீட் பரீட்சையினை மத்திய அரசு திட்டமிட்டே கொண்டுவந்துள்ளது என்றும் அதனை  இரத்து செய்ய வேண்டும் எனவும்  வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg