Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளம்பரத்தில் நடித்த பிரியங்கா சோப்ராவில் கவலை!

In சினிமா
Updated: 09:15 GMT, Sep 8, 2017 | Published: 08:54 GMT, Sep 8, 2017 |
0 Comments
1451
This post was written by : Surenth

முகத்தை வெள்ளையாக்கும் என கூறி விற்கப்படும் கிரீம் விளம்பரத்தில் தான் நடித்ததை எண்ணி கவலையடைவதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த போது, தான் ஆரம்பகாலத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்ததை நினைத்தால் தற்போது தனக்கே அருவருப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

முகத்தை வெள்ளையாக்கும் என கூறி விற்கப்படும் கிரீம் விளம்பரத்தில் தான் நடித்தது மிகவும் சகிக்க முடியாத ஒன்றாக தற்போது இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அந்த விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து தான் விலகிவிட்டதாகவும், இனி அப்படிப்பட்ட விளம்பரத்தில் தான் நடிக்கவே மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், நிறம் சார்ந்து உள்ள பாகுபாட்டை தான் வெறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, பின்னர் பொலிவுட், தற்போது ஹொலிவுட் என சினிமாவில் பிரியங்கா சோப்ரா பிரகாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg