Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

குழந்தைகளை கொலை செய்து தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட தந்தை

In இந்தியா
Published: 09:39 GMT, Sep 8, 2017 |
0 Comments
1152
icon_com
This post was written by : Kemasiya
suicide-hanging-image

மீளமுடியாத வறுமை காரணமாக கூலித் தொழிலாளியொருவர் தனது இரு குழந்தைகளையும் கொன்று தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

மராட்டிய மாநிலம் சங்கம்னர் தேசில் மாவட்டத்தில் உள்ள பொகாரி பலேஷ்வர் கிராமத்தை சேர்ந்த அஷோக் சந்து பதங்கர் (வயது35) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

இவருக்கு 7வயதில் மகனும், 11வயதில் மகளும் உள்ளனர். கூலித் தொழிலாளியான இவர் தனது உழைப்பினை வைத்து பிள்ளைகளை பிடித்த போல் வளர்க்க முடியாதமையினால் மனமுடைந்திருந்ததாக சுற்று வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக அதி மன உளைச்சலுக்கு ஆளான இவர், மனைவி தாய்வீடு சென்றிருந்த தருணத்தில், இரண்டு பிள்ளைகளையும் குரல் வளையை திருகி கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்துள்ளார்.

இதை கண்ட அயல் வீட்டார் பொலிஸாருக்கு கொடுத்த தகவலின் படி குறித்த இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பிரேதங்களை மீட்டதுடன், இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg