Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீட் தேர்வுக்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தினால் தீர்வு கிடைக்கும்: ராமகிருஷ்ணன்

In இந்தியா
Published: 04:56 GMT, Sep 9, 2017 |
0 Comments
1218
This post was written by : Vithushagan
201605091717533905_admk-and-dmk-in-education-Biggest-corruption-accused_SECVPF

ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று நீட் தேர்வுக்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தினால் அவசர சட்டம் பிறப்பிக்கலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நீட் கண்டன பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜி. ராமகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், ” அனிதா என்ற ஏழை மாணவியின் கனவை நீட் தேர்வு சிதைத்து விட்டது, கல்வி அதிகாரம் மாநில அரசியலின் பட்டியலில் இருந்தது. பொதுப்பட்டியலுக்கு சென்ற பின்னர் மாநில அரசுகளின் உரிமை பறிபோய்விட்டது.

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். ஜல்லிக்கட்டு போராட்டம் போல நீட் தேர்வுக்கு எதிராக மகத்தான போராட்டம் நடத்தினால் அவசர சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது.

உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில், போராட்டம் என்ற பெயரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தக் கூடாது.

மத்திய, மாநில அரசை விமர்சிக்கலாம். அமைதியான போராட்டம் நடத்தலாம். மாற்று கருத்தை முன் வைக்கலாம். ஒவ்வொரு குடிமகனுக்கு அமைதியான வழியில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg