Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்துரையாடிய சவூதி, கட்டார் தலைவர்கள்

In உலகம்
Published: 06:42 GMT, Sep 9, 2017 |
0 Comments
1236
This post was written by : Suganthini
qa

அரேபிய நாடுகளுக்கும் கட்டாருக்கும் இடையில் காணப்படும் நெருக்கடி நிலைமையை சுமூகமாகத் தீர்த்து வைக்கும் நோக்கில், சவூதி அரேபியாவுக்கும் கட்டாருக்கும்; இடையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

சவூதி மன்னர் மொஹமட் பின் சல்மானுக்கும் கட்டார் இளவரசர் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத்; அல் தானிக்கும் இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொலைபேசி மூலம் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்நிலையில், சவூதி மன்னரை தொலைபேசியில் தொடர்புகொண்ட கட்டார் இளவரசர் பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

கட்டாரானது பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதாகக் குற்றஞ்சாட்டி சவூதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன கட்டாருடான உறவை கடந்த ஜுன் மாதம் முறித்துக்கொண்டன.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை கட்டார் மறுத்துள்ளது.

இந்த நாடுகளுக்கு இடையில் காணப்படும் நெருக்கடி நிலைமையை சுமூகமாகத் தீர்த்து வைக்கும் நோக்கில், கட்டார் மீது இந்த நாடுகளால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் விவாதிப்பதற்கு தயார் என கட்டார் இளவரசர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இரு நாட்டுத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg