Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளை குத்தகைக்கு விட தீர்மானம்!

In இலங்கை
Published: 12:56 GMT, Sep 9, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Vithushagan
highway-1

தெற்கு மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது. உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்  அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த இரண்டு நெடுஞ்சாலைகளையும் 15 அல்லது 20 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கி ஒரே தடவையில் குத்தகை பணத்தை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு பணிகளை குறித்த வெளிநாட்டு நிறுவனமே மேற்கொள்ளும். வெளிநாடுகளில் இவ்வாறு நெடுஞ்சாலைகள் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டு வெற்றிகரமாக நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தற்போது பேச்சுவார்த்தை மட்டத்தில் இருப்பதாகவும் இறுதியான முடிவுக்கு வந்த பின்னர் விளம்பரங்களை வெளியிட்டு அதிக விலைக்கு குத்தகைக்கு எடுக்க விரும்பும் நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைகள் குத்தகைக்கு வழங்கப்படும்.

எதிர்க்கட்சிகள் இவற்றை விற்பனை செய்ய போவதாக குற்றம் சுமத்தினாலும் அப்படி எதுவும் நடக்காது எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்

highway-1
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg