Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

6 வயது சிறுமிக்கு நன்றி! – சச்சினின் செயலால் வியப்பில் கிரிக்கெட் தரப்பு

In கிாிக்கட்
Updated: 07:38 GMT, Sep 10, 2017 | Published: 04:56 GMT, Sep 10, 2017 |
0 Comments
2481
This post was written by : Puvanes

இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 6 வயது சிறுமி ஒருவரின் கடிதத்திற்கு டுவிட்டர் மூலமாக பதில் அனுப்பியுள்ளார்.

சச்சின் ஓய்வு பெற்றதன் பின்னர் அவருடைய வாழ்க்கை குறித்து, சச்சின் – எ பில்லியன் டிரீம்ஸ் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது.

பாரிய வரவேற்பைப் பெற்ற குறித்த படத்தைப் பார்த்த 6 வயது சிறுமி ஒருவர் சச்சினுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், நான் உங்கள் திரைப்படத்தினைப் பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களது சிறு வயது நாட்களை பார்த்து நான் சிரித்து மகிழ்ந்தேன்.

எனினும் கடைசிப் போட்டியில் நீங்கள் விளையாடியது எனக்கு வருத்தத்தினை ஏற்படுத்தியது. நான் உங்களை குடும்பத்துடன் சந்திக்க விரும்புகின்றேன் என சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

சிறுமியின் கடிதத்திற்கு பதில் அளிக்கும் வகையில் டுவிட்டர் மூலம் பதில் கூறிய சச்சின், எனக்கு கடிதம் எழுதியமைக்கு நன்றி. நீ என் படத்தினைப் பார்த்து ரசித்ததை எண்ணி நான் மகிழ்ச்சியடைகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறுகிய காலத்தில் பிரபலமானவர்கள் கூட தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளும் வேளையில் சாதனைகளை படைத்து ஜாம்பவானாக இருக்கும் சச்சினின் இந்த எளிய செயலை பல்வேறு தரப்பினரும் வியந்து பாராட்டி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

அண்மையில் சச்சின் தனக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து ஆசிகளைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg